பிக்பாஸ் போட்டியாளர் சாக்ஷி நேற்று திருமண பந்தத்தில் இணைந்தார்

by admin

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் மற்றும் தமிழ் நடிகை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான நடிகை சாக்சி அகர்வால் நேற்று கோவாவில் தனது நீண்ட நாள் காதலர் நவ்நீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் சாக்சி அகர்வால் கூறியபோது, ‘ நவநீத் என்பவரை திருமணம் செய்து கொண்டது நான் கண்ட நீண்ட நாள் கனவு நிறைவேறியது போல் இருக்கிறது, அவர் எனக்கு ஒரு உறுதுணையாக ஆதரவாக இருக்கிறார், என்னுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது’ என்று பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து நவ்நீத் – சாக்சி தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்றும் இரு வீட்டார் சம்பந்தத்துடன் தற்போது திருமணம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணம் முடித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன

தொடர்புடைய செய்திகள்