நண்பர்களுடன் விருந்துக்கு சென்றவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு ! on Friday, January 03, 2025
திருகோணமலை, வான் எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வாவி ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் , வான்எல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த மாதம் 31ம் திகதி தனது நண்பர்களுடன் இணைந்து விருந்துக்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால், அவரது உறவினர்கள் வான்எல பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மீகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வாவி ஒன்றிலிருந்து அந்நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.