தாயகத்தில் இந்தியாவிற்கு காணியில்லை?

by wp_shnn

வடக்கில் மன்னாரை தொடர்ந்து கிழக்கில் திருகோணமலையிலும் இந்திய நிறுவனங்களிற்கு காணிகளை வழங்கும் முயற்சிகளிற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றது.

திருகோணமலையில் முத்து நகர் விவசாயக்காணிகளை இந்திய சோளார் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டமானது இன்று காலை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.

தாரைவார்க்கப்படும் முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் இரு போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாய காணிகளும் காணப்படுவதாக விவசாயிகள்; தெரிவித்துள்ளனர்.

திருட்டுத்தனமாக காணிகளை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணி என வர்த்தமாணியின் அடிப்படையில் கையகப்படுத்திய அரச இயந்திரம் தற்போது அதனை இந்தியா சோலார் திட்டத்திற்கு வளங்க திட்டமிட்டிருப்பதாக அறியக்கிடைத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது காணிகள் விடுவிக்கப்படவேண்டும் அங்கு காணப்படும் குளங்கள் புனரமைத்து தரப்படவேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் ஒன்றும் திருகோணமலை மாவட்ட எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருகோணமலையில் தமிழ் மக்களது நிலம் ஆட்சியாளர்கள் தெற்கில் மாறினாலும் தொடர்ந்து பறிக்கப்படுவதாக தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்