கோவை: எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து – 10 மணிநேரம் நீடித்த மீட்புப்பணி
கோவை: எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து – 10 மணிநேரம் நீடித்த மீட்புப்பணி
இன்று, ஜனவரி 3-ம் தேதி, அதிகாலை 2 மணிக்கு கேரளாவின் கொச்சினில் இருந்து கோவையை நோக்கி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
18 டன் எரிவாயுடன் வந்த அந்த லாரி கோவை உப்பிலிப்பாளையம் அருகே உள்ள மேம்பாலத்தில் கவிழ்ந்து, எரிவாயு கசியத் துவங்கியது. லாரி ஓட்டுநர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கவே, அவர்கள் அங்கே விரைந்து வந்தனர்.
விபத்து நடந்த இடத்தைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தார். பிறகு, அந்த டேங்கர் லாரியில் இருந்த 18 டன் எரிவாயு பீளமேடு பகுதியில் உள்ள எல்பிஜி குடோனுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அறிவித்தார். 10 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மீட்புப் பணிகள் நிறைவடைந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.