கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் – மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?

காணொளிக் குறிப்பு, லண்டன்: கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள், புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?

கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் – மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?

லண்டனைச் சேர்ந்த அலெக்சான்டர் பெர்ரியின் நிறுவனம் தயாரிக்கும் மென்மையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, கடற்பாசியால் செய்யப்பட்ட இந்த உள்ளாடைகள் உடல்ரீதியிலான சிக்கல்களைச் சந்திக்கும் பெண்களுக்கு பெரும் ஆறுதல் அளிக்கிறது.

“இது உண்மையான அர்ப்பணிப்பின் மூலம் உருவான ஆடை. பயோகெமிஸ்ட்ரி படித்திருந்தாலும் எனக்கு ஃபேஷன் துறை மீது ஆர்வம் அதிகம்.” என்கிறார் அலெக்சான்டர் பெர்ரி.

இவரின் அலெக்சாண்டர் கிளெமென்டைன் நிறுவனம் கடற்பாசி மற்றும் தாவரங்களைப் பயன்படுத்தி உள்ளாடைகள் தயாரிக்கிறது.

இதற்காக கடற்பாசி சேகரிக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது, அது பிறகு தூளாக மாற்றப்படும். இது யூகலிப்டஸ் செல்லுலோஸ் உடன் கலக்கப்படுகிறது. பிறகு இழையாக நூற்கப்படுகிறது. அதன் பின்னர் துணியில் நெய்யப்படுகிறது.

இந்நிறுவனத்தின் நோக்கம் குறித்து பேசும் அலெக்ஸ், “தொடக்கத்தில், இதை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு ஃபேஷன் பிராண்டாக உருவாக்கினோம். பின்னர் எங்களுக்கு சில மதிப்புரைகள் கிடைத்தன. மெனோபாஸ், பெரிமெனோபாஸ், மார்பக புற்றுநோய், நரம்பு பிரச்னை, அக்கி பாதிப்பு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்களின் மதிப்புரைகள்.”

“இந்த உள்ளாடைகள் எப்படி தங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை அளித்தன என்பதை அவர்கள் கூறினார்கள். இதை பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்று அந்தக் கட்டத்தில்தான் நான் முடிவு செய்தேன்.” என்கிறார்.

முழு விவரம் காணொளியில்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.