12
சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து தெளிவுபடுத்தல் ! on Friday, January 03, 2025
சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் தொடர்பில் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு பொருட்கள் அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்களில் உள்ள இணைப்புகளுக்குள் நுழைவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான போலி விளம்பரங்களில் உள்ள இணைப்புகளுக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.