by 9vbzz1

குடிநீர் விநியோகம் தொடர்பில் விவசாயிகளுக்கும் வடிகாலமைப்பு சபையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் கிளிநொச்சி  மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் விவசாயிகளுக்கும் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தெளிவூட்டும் வகையில் கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை (02) கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தையில் அமைந்துள்ள திட்ட முகமைத் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

அதாவது, கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் வினியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில்  நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையிலே குடிநீர் வினியோகத்துக்குரிய நீரை இரணைமடுக்குளத்திலிருந்து பெற்றுக் கொள்வது தொடர்பில் விவசாயிகளுக்கும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினருக்கும்  இடையில் வாதப்  பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்து இதனை தீர்க்கும் வகையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்