ஹொரணையில் கார் மோதி முதியவர் உயிரிழப்பு! ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரணை – கொழும்பு வீதியில் பொக்குனுவிட பகுதியில் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்து்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொக்குனுவிடவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று விதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெலிகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவராவார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், காரின் சாரதி மது போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.