வடக்கில் தொடரும் மரணங்கள்!

by 9vbzz1

இலங்கையின் வடபுலத்தில் வீதி விபத்துக்களால் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்தே செல்கின்றது.

கிளிநொச்சி. பரந்தன் முல்லைத்தீவு ஏ- 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து  இரு ஆண்களின் சடலங்கள்  இன்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது

மீட்கப்பட்ட இரண்டு சடலங்களையும் பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான்  உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

திருகோணமலை நோக்கி பயணித்த  மோட்டார் சைக்கிள் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்ட பாலத்தின் உட்பகுதியில் விழுந்ததன் காரணமாக இருவரும் உயிரிழந்திருக்கலாம்  என நம்பப்படுகிறது. 

முன்னதாக அடையாளங்காணப்படாத நிலையில் சடலங்கள் மிதந்திருந்த நிலையில் பரபரப்பு தொற்றியிருந்தது.

ஜெய்க்கா வீட்டுத்திட்டம் இக்பால் நகர் நிலாவளி பகுதியைச் சேர்ந்த அன்ரன் சாந்தன் (23 வயது) அதே பகுதியைச் சேர்ந்த சசிகரன் சிம்புரதன் (வயது 21)  ஆகிய  இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே யாழ்.கண்டி வீதியில் கிளிநொச்சி நகரப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த இளம் தாயொவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கணவன் மற்றும் மனைவி இருகுழந்தைகள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானதில் குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே மரணித்திருந்தது.

இந்நிலையில் படுகாயமடைந்திருந்த இளம் தாயும் மரணித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்