ரயிலில் பயணிக்கப் போகிறீர்களா? ரயில்கள் புறப்படும், சேரும் நேரத்தில் மாற்றம் – முழு விவரம்

தெற்கு ரயில்வே, புதிய அட்டவணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் , தெற்கு ரயில்வே அறிவித்துள்ள புதிய ரயில் அட்டவணை அமலுக்கு வருகிறது. அதன் படி, சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது, சில ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருப்பவர்களும் புதிய நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தெற்கு ரயில்வே அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? அதன்படி, தமிழ்நாட்டில் எந்தெந்த ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளன?

தெற்கு ரயில்வே, புதிய அட்டவணை

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எந்தெந்த ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்?

  • ரயில் எண்.06846: ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் மாலை 5.40 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்படும்.
  • ரயில் எண். 06615: மேட்டுப்பாளையம்-போத்தனூர் ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு பதிலாக 1.00 மணிக்கு புறப்படும்
  • ரயில் எண்.06459: கோவை-ஷோரனூர் ரயில் மாலை 4.30 மணிக்கு பதிலாக 4.25 மணிக்கு கிளம்பும்.
  • ரயில் எண்.16614: கோவை-ராஜ்கோட் ரயில் நள்ளிரவு 12.15 மணிக்கு பதிலாக 12.45 மணிக்கு புறப்படும்.
  • ரயில் எண்.06838: கரூர்-சேலம் ரயில் மாலை 7.55 மணிக்கு பதிலாக 8.05 மணிக்கு கரூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்/
  • ரயில் எண்.06819: ஈரோடு-பாலக்காடு ரயில், ஈரோடு சந்திப்பில் இருந்து காலை 7.15 மணிக்கு பதிலாக 7.00 மணிக்கு புறப்படும்.
  • ரயில் எண்.16765: மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயில் மாலை 7.35 மணிக்கு பதிலாக 7.45 மணிக்கு புறப்படும்.
  • ரயில் எண்.06115: திருச்சி மற்றும் கரூர் சந்திப்புகளுக்கு இடையே புதிய முன்பதிவில்லாத சிறப்பு ரயில் காலை 5.25 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 7.20 மணிக்கு கரூரை சென்றடையும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ரயில் எண்.06116: 8.05 மணிக்கு கரூரிலிருந்து இந்த ரயில் புறப்பட்டு 10.50 மணிக்கு திருச்சியை அடையும். ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் பிற ஆறு நாட்களிலும் இந்த ரயில் இயங்கும்.

தெற்கு ரயில்வே, புதிய அட்டவணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

எந்தெந்த ரயில்கள் சேரும் நேரத்தில் மாற்றம்?

அதேபோன்று சில ரயில்கள் வந்தடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • ரயில் எண் 06420: பொள்ளாச்சி-கோவை ரயில் கோவை ரயில் நிலையத்துக்கு இரவு 8.40 மணிக்கு வந்து சேர்வதற்கு பதிலாக 45 நிமிடங்கள் தாமதமாக 9.25 மணிக்கு வந்தடையும்.
  • ரயில் எண் 06422: பொள்ளாச்சி-கோவை ரயில் இரவு 10.15 மணிக்கு பதிலாக இரவு 10.50 மணிக்கு கோவை வந்தடையும்.
  • ரயில் எண் 06123: திருச்சி – கரூர் ரயில், கரூர் ரயில் நிலையத்துக்கு வழக்கமாக இரவு 8.30 மணிக்கு வந்து சேரும். இனிமேல் அரை மணி நேரம் முன்னதாக 8.00 மணிக்கே வந்து சேரும்.
  • ரயில் எண்.16613: ராஜ்கோட் – கோவை ரயில், கோவை ரயில் நிலையத்துக்கு 30 நிமிடங்கள் தாமதமாக, அதாவது இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 8.55 மணிக்கு வந்தடையும்.

நாமக்கல்லில் இனி இந்த ரயில்கள் நிற்கும்

  • ரயில் எண்.20601: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் ரயில்
  • ரயில் எண்.20602: போடிநாயக்கனூரிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் ரயில்

மேற்கண்ட இரு ரயில்களும் இனிமேல் நாமக்கல் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

ரயில்களின் எண் மாற்றம்

தெற்கு ரயில்வே, புதிய அட்டவணை

பட மூலாதாரம், Getty Images

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-மைசூரூ எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது 12609 என்ற எண்ணை கொண்டுள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த ரயில் 16551 என்ற எண்ணை கொண்டிருக்கும்.

மைசூரூ – சென்னை எம் ஜி ஆர் சென்ட்ரல் ரயில் எக்ஸ்பிரஸ் 12610 என்ற எண்ணுக்கு பதிலாக 16552 என்ற எண்ணை கொண்டிருக்கும்.

எம் ஜி ஆர் சென்ட்ரல்- ஹூப்ளி இடையேயான வாரந்தோறும் செல்லும் அதிவிரைவு ரயில் 17311 என்ற எண்ணுக்கு பதிலாக மார்ச் 7ம் தேதி முதல் 20679 என்ற எண்ணை கொண்டிருக்கும்.

ஹூப்ளி மற்றும் எம் ஜி ஆர் சென்ட்ரல் இடையேயான ரயிலின் எண் மார்ச் 6ம் தேதி முதல் 17312 என்பதற்கு பதிலாக 20680 ஆக மாற்றப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்-ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர அதிவிரைவு ரயிலின் எண் 20896 என்பதிலிருந்து 20895 என்று, மார்ச் 7ம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

ராமேஸ்வரம்-புபனேஸ்வர் ரயிலின் எண் 20895 என்பதிலிருந்து மார்ச் 9ம் தேதி முதல் 20896 ஆக மாற்றப்பட்டுள்ளது.

இதை தவிர மேலும் சில ரயில்களின் நேரமும், சில ரயில்களின் எண்களும் மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள் முன்பதிவு செய்யும் போதும், முன்பதிவு செய்த ரயிலில் பயணம் மேற்கொள்ளும் முன்னரும் 139 என்ற ரயில்வே உதவி எண்ணை அழைத்து தகவல்களை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.