புத்தாண்டுக் கூட்டதில் வாகனம் மோதியது: 10 பேர் பலி!: 30 பேர் காயம்!

by wp_shnn

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள பிரபலமான வீதியில் புத்தாண்டுக் கொண்டாத்தின் போது கூட்டத்தினுள் பிக்கப் ரக வாகனத்தை ஒருவர் ஓட்டியதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

இன்று புதன்கிழமை அதிகாலை மக்கள் கூட்டத்தில் நபர் ஒருவர் பிக்கப் வானத்தை ஓட்டி தாக்குதலை நடத்தியுள்ளார். அவர் பயன்படுத்திய வாகனத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி மற்றும் வெடிபொருட்களும் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர் மக்கள் மீது வாகனத்தை ஓட்டி மோதிச் சென்றதுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு காவல்துறையினர் நோக்கிச் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் இத்த துப்பாக்கிச் சூட்டில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டுச் சண்டையின் பின்னர் காவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

டெக்சாஸைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற 42 வயதான ஷம்சுத்-தின் ஜப்பார் என்பவரை சந்தேக நபராக எவ்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்