பலாங்கொடையில் காட்டு யானைகள் அட்டகாசம் ; பயிர்கள் நாசம் !

by wp_shnn

பலாங்கொடையில் காட்டு யானைகள் அட்டகாசம் ; பயிர்கள் நாசம் ! இரத்தினபுரி, பலாங்கொடை, அளுத்வெவ பகுதிக்குள் புதன்கிழமை (01) அதிகாலை நுழைந்த காட்டு யானைகளினால் பயிர்கள் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிகளவிலான பயிர்கள் சேதமடைவதுடன் பாரியளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்