திருகோமலையில் மீட்கப்பட்ட டிரோனால் எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை!!

by admin

திருகோணமலை கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா விமானம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இறுதி அறிக்கையின்படி இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

டிசம்பர் 27 அன்று மீனவர்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானம் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அது பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்தது. 

ட்ரோன் கண்டுபிடிக்கப்படுவதற்கு சுமார் இரண்டு வாரங்கள் கடலில் அலைந்து கொண்டிருந்ததை அறிக்கை மேலும் உறுதிப்படுத்துகிறது.

மேலும், இந்தச் சம்பவம் இலங்கையின் பாதுகாப்பில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், நாட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, குறித்த நிறுவனத்திடம் ஆளில்லா விமானம் ஒப்படைக்கப்படும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்