திங்கள் முதல் இந்திய திரைப்பட விழா

by 9vbzz1

திங்கள் முதல் இந்திய திரைப்பட விழா நாட்டிலுள்ள சகல நகரங்களிலும் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் இந்திய திரைப்பட விழா இடம்பெறவுள்ளதாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதி வரை இத்திரைப்பட விழா இடம்பெறவுள்ளது.

6ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு கொழும்பில் உள்ள பிவிஆர் சினிமாவில் பாலிவுட் ஹிட் ’83’ திரையிடலுடன் விழா தொடங்கவுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கண்டி, அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள துணை உயர்ஸ்தானிகராலயங்கள் கொழும்பு சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையத்துடன் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

இவ்விழாவில் நாடகம், காதல், சண்டைக்காட்சி மற்றும் வரலாற்றுக் காவியங்கள் அடங்கிய செழுமையான திரைப்படங்களின் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இந்தத் திரைப்படங்கள் இந்திய சினிமாக்களின் பன்முகத்தன்மை மற்றும் அதிர்வைக் கொண்டாடுவதாக அமையும். பார்வையாளர்களுக்கு அவர்களின் பன்முக மரபுகளைப் பற்றிய ஒரு நோக்கையும் வழங்கும்.

கொழும்பிற்கு மேலதிகமாக, பதுளை, யாழ்ப்பாணம், காலி, குருணாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிலும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்