லாஸ் வேகாஸில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான உல்லாச விடுதிக்கு வெளியே டெஸ்லா சைபர் ட்ரக் வெடித்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெடிப்புச் சம்பவத்திற்கு முன்னர் டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலின் கண்ணாடி நுழைவாயிலுக்கு மின்சார வாகனம் வந்தது.
வீடியோ காட்சிகள் ஹோட்டல் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த குண்டு துழைக்காத டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பான சைபர் டிரக் தீப்பிடித்து எரிவதற்கு முன்னர் பட்டாசு வெடிப்பதைப் போலவே சிறிய வெடிப்புகள் தோன்றின.
சைபர் டிரக்கிற்குள் இருந்து ஒருவர் இறந்துவிட்டார். மேலும் 7 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
நியூ ஆர்லியன்ஸில் புதன்கிழமை முன்னதாக நடந்த குண்டுவெடிப்புக்கும் தாக்குதலுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில் பிக்கப் ரக வாகனம் கூட்டத்தை மோதியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
மேற்குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு வாகனங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்ததை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.