கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை!

by 9vbzz1

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் மேற்கொள்கின்ற கையெழுத்துப் போராட்டம் நாளை  மூன்றாம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில் கிளிநொச்சி நகரம் எங்கும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவு பெற்று கடந்த 15 ஆண்டுகளாக எந்தவிதமான மனிதாபிமானமும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு கோரி. ஜனாதிபதிக்கு கடிதங்களை கையளிக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் அனைவரையும் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  நகரத்திற்கு மூன்றாம் நான்காம் திகதிகளில் வருகை தருகின்ற அனைத்து மக்களும் பேருந்து நிலையத்திற்கு முன்பாக தங்களின் கையெழுத்து ஒன்றை இட்டு இனத்திற்காக சிறை இருக்கும் எமது பிள்ளைகளை விடுதலை செய்ய ஒத்துழைப்பு வழங்குவோம் என முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் விடுத்துள்ள அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்