கிளிநொச்சியில் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

by 9vbzz1

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் பாலம் ஒன்றிலிருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்றையதினம் (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த இரு இளைஞர்களும்  உந்துருளியல் திருகோணமலை நோக்கி பயணித்த வேளை அவர்கள் பயணித்த உந்துருளி வீதியோரத்தில் இருந்த பாலத்தினுள் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் உருந்துருளியில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் திருகோணமலை நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்டன் சாந்தன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சசிகரன் சிம்புரதன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்றைய தினம் இவர்களது சடலத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்மாயில் ஜெமின் முன்னிலையில் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும், 71ஆயிரத்து நூறு ரூபாய் பணமும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்