3
இன்று காங்கேசன்துறை – நாகப்பட்டினம் படகு சேவை இடம்பெறாது ! on Thursday, January 02, 2025
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான படகு சேவை இன்று இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று வியாழக்கிழமை (02) இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையினால் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் இன்றையதினம் பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சீரற்ற காலநிலையினால் இன்றையதினம் கப்பல் சேவை இடம்பெறாது என்றும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியே பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.