சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார கைது

by 9vbzz1

சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார கைது சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார என்பவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை (01) பிற்பல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை பரிந்துரைத்திருந்தது.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் குமார  கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்