பொலிஸில் சரணடைந்த துப்பாக்கிதாரி !

by adminDev

பொலிஸில் சரணடைந்த துப்பாக்கிதாரி ! on Tuesday, December 31, 2024

கடந்த 14ஆம் திகதி மீகொடை பிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டு நபரொருவரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் சட்டத்தரணி ஊடாக நேற்று (31) மாலை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகொடை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இந்தக் குற்றத்தை முன்னெடுத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணையில், சந்தேகநபர் மீகொடை பொலிஸ் பிரிவில் இரண்டு கொலை முயற்சிச் சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்