பயணப்பெட்டிக்குள் உடலம் கண்டுபிடிப்பு!

by adminDev

கம்போடியாவில் விடுதியில் பயணப்பெட்டி (சூட்கேஸ்) ஒன்றில் உடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உலடம் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட சீன நாட்டவருடையது என நம்பப்படுகிறது.

விடுதியின் அறையில் துப்பரவு செய்யச் சென்ற துப்புரவுப் பணியாளர் அறைக்குள் நுழைந்ததும் துர்நாற்றம் வீசிய பயணப் பெட்டியைப் பார்த்தாள். இதனைத் தொடர்ந்து விடுதியின் மேலாளருக்குத் தகவல் கொடுத்து எச்சரித்தாள்.மேலாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பயணப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது உள்ளே வெட்டப்பட்ட சீன நபரின் உடலைக் கண்டனர்.

சடலத்தில் கழுத்து மற்றும் உடலில் எட்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கைகள், கால்கள் மற்றும் தலை துண்டிக்கப்பட்டு பயணப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

இறந்தவரின் உடல் புனோம் பென்னில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரிகளுக்கு இறுதிச் சடங்கிற்காக மாற்றப்பட்டுள்ளது என காவல்துறையினர் கூறினர்.

சந்தேக நபரை காவல்துறையினர் இன்னும் அடையாளம் காணவில்லை, ஆனால் சந்தேக நபரைக் கைது செய்ய அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்