டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் – பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் ! on Tuesday, December 31, 2024
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் மிக வேகமாக பரவிவருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இதுவரையில் பலர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அச்சம் காணப்படுகிறது.
இதனை கருதிற்கொண்டு டெங்கு நுளம்பினை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அவரசமாக மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், நேற்று திங்கட்கிழமை (30) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பிரஸ்தாபித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாளர் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக தெரிவித்தனர்.