ஜாகீர்கான் போன்று பந்துவீசும் 10 வயது மாணவி – சச்சின் டெண்டுல்கரால் பிரபலமான இந்த மாணவி யார்?
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் ஒரு மாணவியின் வீடியோவை வெளியிட்டிருந்தார். ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் வசிக்கும் சுசீலா மீனாவின் வீடியோ தான் அது.
சுசீலா மீனா, பந்து வீசும் வீடியோவை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர், இந்தியாவின் மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான, பந்து வீச்சாளர் ஜாகீர் கான் பந்து வீசுவதைப் போன்றே சுசீலாவும் பந்து வீசுகிறார் என்று கூறியிருந்தார். அந்த வீடியோ வைரலானதும் தலைப்புச் செய்தியானார் மீனா.
10 வயதான அந்த மாணவி, அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் படித்து வருகிறார். கிரிக்கெட் விளையாடுவது அவருக்கு பிடித்தமான ஒன்று. அவருக்கு மட்டுமின்றி அவரது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பிடித்தமான ஒன்று.
உண்மையில் மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதற்காகவே அவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சிகள் வழங்குவதாக கூறுகிறார் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர். இந்த பள்ளியில் படித்தவர்கள் வைரல் ஆவது இது ஒன்றும் முதல் முறையல்ல.
ஆனால் அவ்வபோது, இந்த பள்ளி மாணவர்கள் வைரல் ஆகும் போது அந்த மாணவர்களின், கிராமத்தின் வளர்ச்சிக்காக உதவுகிறோம் என்று சிலர் வாக்குறுதிகள் கூறுகின்றனர். ஆனால் அதன் பின் எதுவும் நடப்பதில்லை.
இந்த மாணவிகள் கிரிக்கெட் விளையாடக் காரணம் என்ன? அவர்களின் கிராமத்தினர் விரும்புவது என்ன? முழு விபரமும் இந்த வீடியோவில்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.