சிடாஸ் அமைப்பினால் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘குழந்தை மொழி’ நூல் வழங்கி வைப்பு. on Tuesday, December 31, 2024
(சித்தா)
சிடாஸ் கனடா அமைப்பின் 20 ஆவது வருட நிறைவையொட்டி சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பினால் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘குழந்தை மொழி’ எனும் நூல் வழங்கும் வைபவம் வலயக் கல்விப் பணிப்பாளர் யோகேந்திரா ஜெயச்சந்திரன் தலைமையில் (2024.12.31) இன்று காலை 10.30 மணியளவில் மட்/மமே/குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரி.உதயாகரன் அவர்களும் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் முத்துராஜா புவிராஜா, செயலாளர் எஸ்.கணேஸ், உறுப்பினரான கணபதிப்பிள்ளை லிங்கராஜா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வினை முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் கணேஷ் அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தகங்களை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் உறுப்பினர்களும் வழங்கி வைத்திருந்தனர். இதன்போது அறுபத்தைந்திற்கும் அதிகமான முன்பள்ளி ஆசிரியர்கள் இந்நூல்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.