குடும்பத் தகராறு : நபரொருவர் குத்திக் கொலை !

by wp_shnn

குடும்பத் தகராறு : நபரொருவர் குத்திக் கொலை ! on Tuesday, December 31, 2024

மதுரங்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடயாமட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (30) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மதுரங்குளிய கடயாமட்ட பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் தனது மூத்த சகோதரியின் மகன் உள்ளிட்ட சிலருடன் ஏற்பட்டுத்திக் கொண்ட தகராறில், சகோதரியின் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுரங்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்