அரச சேவையில் ஆட்குறைப்பு செய்யப்படாது : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ !

by adminDev

அரச சேவையில் ஆட்குறைப்பு செய்யப்படாது : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ! on Tuesday, December 31, 2024

அரசாங்க ஊழியர்களில் குறைப்பை மேற்கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், அரச சேவையில் மக்களை திறம்பட மற்றும் வினைத்திறனுடன் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை நாட்டு மக்களுக்கு சேவைகளை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர்,

சுகாதார அமைச்சின் கீழ்நிலையில் உள்ள பெரும்பாலான ஆட்சேர்ப்புகள் சேவை தேவையை விட அரசியல் தேவைக்காக செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்