ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல் !

by adminDev

ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல் ! on Monday, December 30, 2024

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் காலமானார்.

தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் ஏனைய அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தவர் இவராவார்.

மேலும், கடந்த 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசையும் ஜிம்மி கார்ட்டர் பெற்றிருந்தார்.

ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்