1977 முதல் 1981 வரை அமெரிக்க ஜானதிபதியாக இருந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 100வது வயதில் காலமானார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஜார்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள அவரது வீட்டில் இறந்தார். அங்கு அவரும் அவரது மனைவி ரோசலின்னும் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அந்த வீட்டில் கழித்தனர். ஏறக்குறைய இரண்டு வருடங்களாக அவர் மருத்துவ மனையில் இருந்தார்.
கார்ட்டர் தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் மற்ற அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தார். அவரது காலம் பெரும்பாலும் மத்திய கிழக்கில் வரலாற்று தருணங்களுக்காக நினைவுகூரப்படுகிறது.
எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 1978 ஆம் ஆண்டு கேம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கைகளின் இடைத்தரகராக இருந்து 1979 இல் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று சமாதான உடன்படிக்கைக்கு வழிவகுத்தார்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் 444 நாட்களுக்குப் பிணைக் கைதிகளாக இருந்த டெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்த 52 ஊழியர்களை விடுவிக்க அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் ஜனாதிபதியாகவும் இருந்தார்.
1980 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்காக அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, பணயக்கைதிகளுக்கான அமெரிக்க மீட்புப் பணி ஏப்ரல் மாதம் தோல்வியடைந்தது. எட்டு அமெரிக்கர்கள் இறந்தனர். இது ஒரு திருப்புமுனையாக நிரூபணமானது மற்றும் ரீகனுடனான ஜனாதிபதித் தேர்தலில் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
1981 இல் ரொனால்ட் ரீகன் பதவியேற்ற சில நிமிடங்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதிப் பதவியில் இரண்டாவது தடவை போட்டியிட்டு தோல்வியடைந்தவதைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டில் கார்ட்டர் மையத்தை நிறுவினார். இது அவர் சர்வதேச சமாதானம், ஜனநாயகம், பொது சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டது செயற்பட்டார்.
அக்டோபர் 1, 1924 அன்று ஒரு மருத்துவமனையில் ஒரு செவிலியருக்கும் பொதுக் கடையின் உரிமையாளருக்கும் பிள்ளையாக கார்ட்டர் பிறந்தவர். அவர் கடற்படை அகாடமியில் பயின்றார் மற்றும் அவரது சகோதரியின் நண்பரான ரோசலின் ஸ்மித்தை காதலித்தார்.
கார்ட்டர் 1946 இல் திருமணம் செய்துகொண்டு 77 ஆண்டுகள் ரோசலின் ஸ்மித்துடன் ஒன்றாக வாழ்ந்தார். கடந்த நவம்பர் 2023 இல் 96 வயதில் ரோசலின் ஸ்மித் இறந்தார்.
1976 இல் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் பதவியேற்றபோது, கார்ட்டர் ஜார்ஜியாவிற்கு வெளியே அறியப்படாதவராக இருந்தார். அவர் தனது ஒற்றைப் பதவிக் காலத்தில் மிதமான முற்போக்கான கொள்கைகளை ஊக்குவித்தார். இது 1980 இல் பொருளாதார மந்தநிலை மற்றும் ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. தனது இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் ரொனால்ட் ரீகனிடம் தோல்வியடைந்தார்.
இவர் தனது மனைவியுடன் சேர்ந்து, உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான காரணங்களை மேம்படுத்துவதற்காக பணியாற்றினார் மற்றும் 2002 இல் அமைதிக்கான நோபல் பரிசை இவர் வென்றார்.