வாகரையில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

by sakana1

வாகரையில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது ! on Sunday, December 29, 2024

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோணிதாண்டமடு பகுதியில் இரண்டு உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை வாகரை முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 48 மற்றும் 51 வயதுடைய கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாகரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்