on Sunday, December 29, 2024
முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்கள் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸச வீதி பகுதியில் கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல தகவல்கள் வௌிச்சத்திற்கு வந்துள்ளன.
அதன்படி, பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 9 முச்சக்கரவண்டிகளும், அதனை வைத்திருந்த மேலும் நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் 31, 38, 51 மற்றும் 54 வயதுடைய சீதுவ, ஒருகொடவத்த, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட முச்சக்கரவண்டிகள் கோட்டை, கிரிபத்கொடை, வத்தளை மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருடப்பட்டமையும் விசாரணையின் போது வௌியாகியுள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.