டாப் 10 கட்டுரைகள்

2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வர இருக்கிறது. கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு செய்திகளை எளிமையாக, விரிவாக, புதிய கோணங்களில் பிபிசி தமிழ் உங்களுக்கு வழங்கியுள்ளது.

பிபிசி தமிழின் இணையதளத்தில் 2024 ஆம் ஆண்டில் வெளியான கட்டுரைகளில் அதிகமானோர் படித்த 10 கட்டுரைகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மெட்ராஸில் பிறந்து மகாராஜாவை மணமுடிக்க முஸ்லிமாக மாறிய வதோதரா மகாராணி சீதாதேவி

பட மூலாதாரம், Getty Images

10. மெட்ராஸில் பிறந்து மகாராஜாவை மணமுடிக்க முஸ்லிமாக மாறிய வதோதரா மகாராணி சீதாதேவி

சீதாதேவி தனது காதலருடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். தனது திருமணத்திற்கு தடையாக இருந்த சமூகப் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு, தனது காதலருடன் இணைவதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த முடிவு, சமூகத்தில் நிலவும் மதம், சாதி போன்ற காரணங்களால் ஏற்படும் திருமணத் தடைகளை எதிர்கொள்ளும் பலரின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

கிரகணம்

பட மூலாதாரம், Getty Images

9. சூரிய கிரகணம்: பகலிலும் எங்கெல்லாம் 4 நிமிடம் இருள் சூழும்? இந்தியாவில் தெரியுமா?

ஏப்ரல் 8- ஆம் தேதி அன்று நடந்த சூரிய கிரகணத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக கண்டனர். அந்த நேரத்தில், பூமியில் பகலிலும் இருள் சூழ்ந்த இடங்கள் எவை? இந்தியாவில் இந்த கிரகணம் தெரிந்ததா? இந்த சூரிய கிரகண நேரத்தில் 3 ராக்கெட்டுகளை ஏவ நாசா திட்டமிட்டது ஏன்?

கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

8. டி20 உலகக்கோப்பை: சூர்யகுமாரின் கேட்ச் பற்றி தென்னாப்பிரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்காவின் கைகளை விட்டு வெற்றி நழுவிச் சென்றது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அணி தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன? மேலும் இந்திய வீரர் சூர்யகுமார் பிடித்த கேட்ச் பற்றி தென்னாப்பிரிக்காவில் அப்போது என்ன பேசப்பட்டது என்பவை இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொப்புள்

பட மூலாதாரம், Getty Images

7. உங்கள் தொப்புளில் பருத்தி போன்று கழிவுகள் சேர்கிறதா? அதில் என்ன இருக்கிறது தெரியுமா?

தொப்புளில் உருவாகும் மென்மையான, பருத்தி போன்ற கழிவுகள் உருவாகின்றன. தொப்புளில் இந்த கழிவுகள் எங்கிருந்து வருகிறது, அது எப்படி உருவாகிறது, எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ்

பட மூலாதாரம், NASA

6. ஈர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவது எப்படி? கழிவுகளை எவ்வாறு அகற்றுகிறார்கள்?

பல மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் வரும் பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வரப்படவுள்ளனர். ஆனால் அவர்கள் விண்வெளியில் தங்களுக்கு விருப்பமான உணவை எவ்வாறு உண்டு வருகின்றனர்?

தமிழ்நாட்டில் காதலிக்காக ராஜேந்திர சோழன் கட்டிய 'காதல் சின்னம்' பற்றி தெரியுமா?

5. தமிழ்நாட்டில் காதலிக்காக ராஜேந்திர சோழன் கட்டிய ‘காதல் சின்னம்’ பற்றி தெரியுமா?

சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழனின் வீரம் பற்றி தெரியும். ஆனால் தனது காதலிக்காக அவர் கட்டிய காதல் சின்னம் பற்றி தெரியுமா? அவர் தனது அனுக்கி (காதலி) பரவை நங்கையின் வேண்டுகோளை ஏற்று கட்டிய கோவில் தான் அது.

பாம்பு

பட மூலாதாரம், Getty Images

4. இந்தியாவில் 4.7 கோடி ஆண்டுகள் முன் வாழ்ந்த பிரமாண்ட ‘வாசுகி பாம்பு’ – எங்கே? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள லிக்னைட் சுரங்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சில புதைபடிவங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதுவே உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு புதைபடிவங்களில் மிக நீளமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாம்பு பற்றி இந்த ஆராய்ச்சியில் வெளியான ஸ்வாரசியமான தகவல்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஜெர்மனியில் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபருக்கு என்ன ஆனது?

பட மூலாதாரம், PA Media

3. ஜெர்மனியில் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபருக்கு என்ன ஆனது?

ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயதான நபர் மருத்துவர்களின் ஆலோசனைக்கு எதிராக, கடந்த இரண்டரை வருடங்களில் 217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த நபரை எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்தனர். அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியது என்ன?

குடல் புழு

பட மூலாதாரம், Getty Images

2. வயிற்றுக்குள் குடல் புழுக்கள் எப்படி நுழைகின்றன? அவற்றை எவ்வாறு நீக்க வேண்டும்?

குடல் புழுக்கள் ஒரு பெரிய பிரச்னை. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மற்றும் பிற காரணங்களால் புழுக்கள் உடலில் நுழையலாம். நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சிகளில் அவற்றின் விளைவுகள் மாறுபடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுக்குள் குடற்புழுக்கள் வருவது எப்படி? அவற்றை எவ்வாறு நீக்க வேண்டும்?

ராஜநாகம் குறித்த புதிய கண்டுபிடிப்பை ஊர்வன ஆய்வாளர் முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

பட மூலாதாரம், P. Gowri Shankar

1. ராஜநாகம் தீண்டி உயிர் பிழைத்தவர் செய்த ஆய்வில் உடைபட்ட 180 ஆண்டு ரகசியம்

ஊர்வன ஆராய்ச்சியாளர் முனைவர் கௌரி ஷங்கரை 2005இல் ராஜநாகம் கடித்தது. அதிலிருந்து மீண்டு வந்த பிறகு, அவர் ராஜநாகம் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். அதன் விளைவாக, ராஜநாகத்தைப் பற்றி 180 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவராமல் இருந்த ஓர் அறிவியல் ரகசியத்தை அவரது ஆய்வுக்குழு சமீபத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளது.

அந்த ரகசியம் 180 ஆண்டுகால மர்மத்தை விலக்கியது எப்படி? சமீபத்திய ஆய்வில் கிடைத்தது என்ன? என்பதை முழுவதுமாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.