நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது ! on Sunday, December 29, 2024
(பாறுக் ஷிஹான்)
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் சனிக்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
நிந்தவூர் 07 பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 2 கிராம் 580 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபருடன் சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மற்றும் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.