சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு !

by wp_fhdn

சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ! on Sunday, December 29, 2024

மாத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த இரு இளைஞர்கள் சுது கங்கையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளையில் கிவுல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரும் களுதாவளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபருமே உயிரிழந்துள்ளனர்.

நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஒருவர் நேற்று சனிக்கிழமை (28) நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வலையில் இருந்து பீப்பாய் ஒன்றை அகற்ற முற்பட்டபோதே ஆற்றில் விழுந்துள்ளார்.

ஆற்றில் விழுந்த இளைஞரை காப்பாற்ற மற்றைய இளைஞரும் ஆற்றில் குதித்ததாகவும், அவ்வேளை இருவரும் அடித்துச் செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்