ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் தனித்து செயற்பட முற்படுமானால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து தமிழ் தேசியக் கட்சி தனித்து களமிறங்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ரெலோ மற்றும் புளொட் இயக்கம் தனித்து செயற்பட முனையுமானால் தமிழ் தேசியக் கட்சியாக தனித்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற இருக்கின்ற அனைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலும் வேட்பாளர்களை தெரிவு செய்து தேர்தல் களத்தில் நிற்போம்.
இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசிய கட்சியின் நிர்வாகக்குழு கலந்துரையாடவுள்ளோம்.
மேலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்ற பொழுது அவர்கள் தனித்து செயற்படவுள்ளார்களா அல்லது இந்த விடயம் உண்மையா என்பது தொடர்பில் உண்மை தன்மையை அறிய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.