இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசாவை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை

by 9vbzz1

இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசாவை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை – இந்தியாவுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இது ஏதுவாக அமையும் என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையின் இந்த கோரிக்கை தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மன், அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 6 மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறையிலுள்ளது.

மேற்கூறப்பட்ட நாடுகளோடு நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், டென்மார்க், போலன்ட், கசகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், செக் குடியரசு, இதாலி, சுவிஸ்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், இரான், சுவீடன், கட்டார், ஓமான், பஹரைன் மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இந்த இலவச விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையிலேயே இலங்கை பிரஜைகளுக்கும் இலவச விசா வழங்குவது குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தியாவுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இது ஏதுவாக அமையும் என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையின் இந்த கோரிக்கை தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மன், அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு இலவச வீசா வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 6 மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறையிலுள்ளது.

மேற்கூறப்பட்ட நாடுகளோடு நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், டென்மார்க், போலன்ட், கசகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், செக் குடியரசு, இதாலி, சுவிஸ்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், இரான், சுவீடன், கட்டார், ஓமான், பஹரைன் மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இந்த இலவச விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையிலேயே இலங்கை பிரஜைகளுக்கும் இலவச விசா வழங்குவது குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்