நடிகர் அஜித் குமார் – இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியானது. அப்பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
பாடலில் சமீபத்தில் டிரெண்டாக இருக்கும் சீமான் குரலில் இருங்க பாய் என்ற வசனம் பாடல் முழுக்க ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. லிரிக் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார்.
இந்த பாடலில் அஜித் மற்றும் த்ரிஷா நடனம் ஆடியிருப்பது தற்போது ட்ரெண்டிங் . உண்மையில் இந்த சவதீக்கா என்ற சொல் தாய்லாந்து மொழி சொல்லாகும். அதன் அரத்தம் ஹலோ என்பதாகும். ஒருவரை வரவேறகும் போது ‘Sawadee Ka என பெண்களுக்கும் Sawadee Krub என ஆண்களையும் அழைக்கின்றனர்.