3
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அறிக்கையின்படி, பண்டிகை காலத்தின் போது, மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்த 381 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத நடுப்பகுதி வரை, மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என, அதன் செயலாளர் சமில் முதுகட தெரிவித்தார்