மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் ! on Saturday, December 28, 2024
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை (27) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித திருத்தங்களையும் மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும் என இலங்கை மின்சார சபை பரிந்துரைத்திருந்தது.
இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, கருத்து தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.
எனவே, மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 0772 943 193 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ள முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.