மன்மோகன் சிங்கின் பூதவுடல்11:45க்கு தகனம்

by wp_shnn

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பூதவுடல் இன்று (28) காலை 8 மணிக்கு, அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அதன்பின்னர், காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஊர்வலம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடைந்ததும், அங்கு இராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் இறுதி சடங்குகள் நடைபெறும்.

பின்னர் காலை 11.45 மணியளவில் மன்மோகன் சிங்கின் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்