நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டி மீது மோதி மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி !

by wamdiness

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டி மீது மோதி மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி ! on Saturday, December 28, 2024

கொட்டாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

பன்னிப்பிட்டியிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பன்னிபிட்டிய, பிராமணகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.

விபத்து தொடர்பில் கொள்கலன் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்