டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !

by wamdiness

டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் ! on Saturday, December 28, 2024

டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 425 கிராம் டுனா டின் மீன் வகையின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகும்.

மெகரல் வகையான 155 கிராம் டின் மீன் அதிகபட்ச சில்லறை விலையானது 180 ரூபாவாகவும், 425 கிராம் டின் மீன் விலை 420 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஜெக் மெகரல் டின் மீன் அதிகபட்ச சில்லறை விலையானது 560 ரூபா எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்