சைபீரியா: 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானைக் குட்டியின் உடலைக் கைப்பற்றிய ஆய்வாளர்கள்
ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானைக் குட்டியின் (மாமத யானை) உடலை கைப்பற்றியுள்ளனர். சைபீரியாவின் யகுசியா பிராந்தியத்தில், பனி அடுக்குகளுக்கு நடுவே அந்த யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட யானையின் உடலாக இது அறியப்படுகிறது. இந்த உடல் கண்டெடுக்கப்பட்ட யானா நதியின் படுகையை கருத்தில் கொண்டு, இந்த யானைக்கு ‘யானா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
100 கிலோ கிராம் எடை கொண்ட இந்த யானையின் உயரம் 120 செ.மீ-ஆகவும், நீளம் 200 செ.மீ-ஆகவும் உள்ளது. யானா இறந்தபோது அதற்கு ஒரு வயது இருந்திருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு, இதேபோன்று 6 உடல்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து ரஷ்யாவிலும், ஒன்று கனடாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முழு விவரம் காணொளியில்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு