1
நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்ஏ.சுமந்திரனிற்கு ஆறுதல் பரிசாக கட்சியின் ஊடகப்பேச்சசாளர் பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ. சுமந்திரன் செயற்படுவார் என தமிழரசு கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற குழு பேச்சாளராக சிறிநேசனை நியமித்து உள்ளமையினால் அவர் நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார்.
எனினும் தமிழரசு கட்சியினுடைய ஊடக பேச்சாளராக தொடர்ந்து எம். ஏ. சுமந்திரன் செயல்படுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.