1
ஊடகவியலாளர் முருகையா தமிழ் செல்வன் கைது தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் திங்கள் அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளதாக முருகையா தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
என் மீதான் தாக்குதல் மற்றும் கடத்த முயற்சி செய்த சந்தேகநபர்கள் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதி மன்றில் முற்படுத்தப்பட்டனர். இவர்களை திங்கள் வரை விளக்கமறியலில் வைத்த நீதிமன்றம் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நபர்கள் ஏற்கனவே பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் பல வழக்குகள் உள்ளது என தெரிவிக்கப்படுகிறதெனவும் முருகையா தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.