யாழில் இருந்து சென்ற பேருந்தின் சில்லு உடைந்து விபத்து

by smngrx01

யாழில் இருந்து சென்ற பேருந்தின் சில்லு உடைந்து விபத்து

Friday, December 27, 2024 கிளிநொச்சி

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து இயக்கச்சி இராணுவ முகாம் முன்பாக விபத்துக்குள்ளாகியது.

பேருந்தின் சாரதி பக்க சில்லின் அச்சு உடைந்து, சில்லு தீப்பிடிச்சு சென்றதில், அருகில் பயணித்த பட்டா வாகனத்தின் மீது சில்லு மோதியதில் , பட்டா சாரதி நிலைகுலைந்து, பட்டாவும் விபத்துக்குள்ளாகியது. 

பஸ் சாரதியின் சாமர்த்தியத்தால், பஸ் குடை சாயாமல் நிறுத்தப்பட்டு சேதங்கள் தடுக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

தொடர்புடைய செய்திகள்