காணொளிக் குறிப்பு,

90 வயதில் இவ்வளவு பலமா? பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு அசத்திய பாட்டி

தைவானை சேர்ந்தவர் 90 வயதான செங் சென் சின்-மெய். இவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்.

கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தைபேவில் நடந்த பளுதூக்கும் போட்டியில் பங்கேற்றார். 70 வயதுக்கு மேற்பட்ட 45 போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்ற சென் சின், 35 கிலோ எடையே எளிதாகத் தூக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)