2
வவுனியாவில் அண்மையில் ஏற்பட்ட மழையினால் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் கமநல அபிவிருத்தி நிலையங்களின் கீழ் செய்கை பண்ணப்பட்ட 3529.25 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அழிவடைந்த நெற்காணிகள் தொடர்பாக கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள காப்புறுதிச்சபையின் உத்தியோகத்தர்களால் மதீப்பீடு செய்யும் பணிகள் அண்மைய நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்தது.
மதிப்பீட்டின் அடிப்படையில் 1,387.5 ஏக்கர் நெற்காணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஏக்கருக்கும் தலா 14,400 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.