1
யாழில். காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு
ஆதீரா Friday, December 27, 2024 யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் நான்கு நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கு, கைதடியைச் நவரத்தினம் தனுசன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் 24 ஆம் திகதி முற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.