மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மைத்துனரும் தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா அமைப்பின் துணைத் தலைவருமான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி (Hafiz Abdul Rehman Makki) வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜமாத்-உத்-தவா (JuD) அமைப்பின் தகவலின்படி,
அவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பினை எதிர்கொண்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அதித நீரிழிவு நோய்க்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2019 மோ மாதம், மக்கி பாகிஸ்தான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு லாகூரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டில், பாகிஸ்தானிய நீதிமன்றமும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தது தொடர்பான வழக்குகளில் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது மற்றும் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
2023 ஜனவரியில், மக்கி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் (UNSC) “உலகளாவிய பயங்கரவாதி” என்றும் அறிவிக்கப்பட்டார்.
166 பேர் கொல்லப்பட்ட 2008 நவம்பர் 26 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு நிதியுதவி செய்வதில் மக்கி ஈடுபட்டார்.
மும்பை தாக்குதலின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் மொத்தம் ஒன்பது பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் மற்றும் அமீர் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தவிர, செங்கோட்டை தாக்குதலில் ஈடுபட்டதற்காக பாதுகாப்பு நிறுவனங்களால் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக மக்கி இருந்தார்.
2000 டிசம்பர் 22 அன்று ஆறு பயங்கரவாதிகள் செங்கோட்டையில் நுழைந்து கோட்டையை பாதுகாக்கும் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அது தவிர, 2018 ஆம் ஆண்டில், மூத்த பத்திரிக்கையாளரும், ரைசிங் காஷ்மீர் செய்தித்தாளின் தலைமை ஆசிரியருமான ஷுஜாத் புகாரி மற்றும் அவரது இரண்டு பாதுகாவலர்களைக் கொல்லப்பட்டதன் பின்னணியில் மக்கியின் பயங்கரவாத அமைப்பு இருந்தது.