முதல் இன்னிங்ஸில் தடுமாற்றத்துடன் இந்தியா!

by smngrx01

மெல்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் அதிகபடியாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ஓட்டங்களையும், விராட் கோலி 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதேநேரம், இரண்டாம் நாள் முடிவில் ரிஷப் பந்த் ஆறு ஓட்டங்களுடனும், ரவீந்திர ஜடேஜா நான்கு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 60 ஓட்டங்கள‍ை எடுத்தார், அதேநேரம் ஸ்டீவ் ஸ்மித் 140 ஓட்டங்களையும், லாபுசேன் 72 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.

நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும் என்பதுடன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட்கட்டுகள் மீதமிருக்க இன்னும் 310 ஓட்டங்களால் பின் தங்கிய நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்